ராணிப்பேட்டையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.!!
fire accident at plastic gudone in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தக் குடோனில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குடோனின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவியதனால் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயை அணைக்கும் போது குடோனில் கரும்புகை ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக புகார் அளித்தனர்.
English Summary
fire accident at plastic gudone in ranipet