ஹவாய் கடற்பகுதியில் 44 டன் கழிவுகள் அகற்றம்
volunteers removed 44 ton waste in Hawaii sea
உலகின் முன்னணி சுற்றுலா இடமாக விளங்கும் ஹவாய் தீவுகளில் கடல் நீர் மாசடைந்து வருவதால், பல்வேறு அரியவகை உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் ஹவாய் தீவுகளையொட்டிய கடற்பகுதியில் மீனவர்கள் விட்டுச் செல்லும் நைலான் வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் விடப்படும் கழிவு பொருட்கள் அனைத்தும் கடலில், ஆமை, சுறா உள்ளிட்ட அரிய உயிரினங்களுக்கு அழிவை ஏற்படுத்துவனாக உள்ளன.
இதையடுத்து தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலில் மூழ்கி அடியில் இருந்த வலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட 44 டன் அளவுள்ள கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
மேலும் கடற்கரையை ஒட்டி குவிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளையும் கடலில் கலக்காதவாறு முழுமையாக அகற்றியுள்ளனர்.
English Summary
volunteers removed 44 ton waste in Hawaii sea