தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!
Wanted Khalistani terrorist shot dead in Pakistan
பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரம்ஜித் சிங். 1990ல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்ற இவர் காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பின் கிளையாக பஞ்ச்வார் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார். மேலும் இவர், இந்திய அரசுக்கு எதிராக சிறுபான்மை சீக்கிய சமூகத்தை தூண்டுவதற்காக பாகிஸ்தானில், தேசத்துரோக மற்றும் பிரிவினைவாத நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஒரு முக்கிய வழித்தடமாக இருந்தார்.
இந்நிலையில், பல பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் இந்தியா காவல்துறையால் தேடப்பட்டுவரும், காலிஸ்தான் தலைவரான பரம்ஜித் சிங் பாகிஸ்தானின் லாகூரில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று அதிகாலை லாகூரின் ஜௌஹர் நகரிலுள்ள சூரியகாந்தி சொசைட்டிக்குள் அவரது இல்லம் அருகே பரம்ஜித் சிங் நடைபயணம் மேற்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பரம்ஜித் சிங்கின் மீது சரமரியாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பரம்ஜித் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, நாகூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பஞ்ச்வார் குழு தலைவரின் மறைவுக்குப் பின், கலவரம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
English Summary
Wanted Khalistani terrorist shot dead in Pakistan