அதிகரிக்கும் போர் பதற்றம்.! தைவானுக்கு போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பிய சீனா.!
War tension increases as china sent Warcrafts to Taiwan border
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் பிரதிநிதிகளின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் தைவானுக்கு பயணம் செய்தது சீனாவை மேலும் வெறுப்பேற்றியுள்ளது.
இதனால் தைவான் எல்லை பகுதியில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டும், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தி தைவானை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தைவானை நோக்கி சீனா 23 போர் விமானங்களையும், 4 போர்க்கப்பல்களையும் அனுப்பியுள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், தைவான் சுற்றுப் பகுதிகளில் இரண்டு ஜே-11 போர் விமானங்கள், மூன்று எஸ்யு-30 போர் விமானங்கள், எட்டு ஜே-16 போர் விமானங்கள், உள்ளிட்ட 17 சீன போர் விமானங்கள், ஒரு ட்ரோன் மற்றும் நான்கு போர் கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தைவான் தனது எல்லைப் பகுதிகளில் வான் மற்றும் கடல் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்தியுள்ளது. மேலும் நிலத்தில் ஏவுகணை அமைப்புகளை நிறுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
War tension increases as china sent Warcrafts to Taiwan border