இனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தரமாட்டோம் அவ்ளோதான் முடிச்சிக்கலாம்!அதிபர் மேக்ரானுக்கு நேதன்யாகு பதிலடி!
We will not supply arms to Israel Netanyahu response to President Macron
பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம்.
போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை. பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது.
ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
English Summary
We will not supply arms to Israel Netanyahu response to President Macron