என்ன சொல்றீங்க....மனிதர்கள் வாழும் பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!
What do you say Discovery of a new planet similar to the earth where humans live
மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்ட பூமியைப் போல் வெளிப்புற கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என தகவல் வந்துள்ளது.
சூரியனைச் சுற்றும் கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அந்த வகையில், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றும் கிரகங்கள் வெளிப்புற கோள்கள் என்று அழைக்கப்டுகின்றன. இதுவரை மனிதனால் இதுபோல 5,600 வெளிக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில், 40 ஒளியாண்டுகள் தொலைவில் நட்சத்திர மண்டலத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தன்மைகளைக் கொண்ட புதிய வெளிப்புறக் கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் என்ற தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கிரகம் 12.8 நாட்கள் டுவார்ப் விண்மீனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்கிறது. பூமி மற்றும் வீனஸ் ஆகிய கிரங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட எடையில் உள்ள Gliese 12b கிரகத்தில் திரவ நீர் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், சூரியனின் எடையில் இருந்து 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திரவ நீர் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகத்ததை பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
English Summary
What do you say Discovery of a new planet similar to the earth where humans live