விடுவிக்கப்பட்ட விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே !! - Seithipunal
Seithipunal


கடந்த காலத்தில் உலகில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறித்து அவர்கள் சம்பந்தபட்ட சர்ச்சையான செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பற்றி பெரும் செய்திகள் சமீபத்தில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க நீதித்துறையுடனான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க அரசாங்கத்தின் தகவல்களை திருடி அதை பொது வெளியில் வெளியிட்ட குற்றதிற்காக தண்டனை வழங்கப்பட்டது. 

இந்த தகவல் வெளியீட்டு குற்றத்திற்காக அவர் தனது ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்தார். அவர் ஏற்கனவே அனுபவித்து வந்த வழக்கில் இப்போது நீதிமன்றம் அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவ்வாறான நிலையில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் விடுதலையாகி அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய ஆவணங்களை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பொது வெளியில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார் ஜூலியன் அசாஞ்சே. அந்த மிகவும் ரகசியமான தகவல்களை வெளியிடுவதற்காக ஜூலியன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு 62 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில் அவர் ஐந்து ஆண்டுகள் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் 5 ஆண்டுகளாக லண்டன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, ​​அவர் ஏற்கனவே பல நாட்கள் சிறையில் இருந்தமை காரணமாக , பின்னர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது தண்டனை முடிந்து விடுதலையான பிறகு தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WikiLeaks founder Julian Assange has been released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->