கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ... 67 லட்சம் ஏக்கர் தீயில் கருகி நாசம்...!
Wildfire ravages Canada destroys 67 lakh hectares forest
வட அமெரிக்க நாடான கனடாவின் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை மற்றும் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவ தொடங்கியுள்ளது. இந்த காட்டுத்தீ அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் மற்றும் பிலடெல்பியா பகுதி உட்பட பென்சில்வேனியாவின் சில பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் காற்றின் வேகத்தால் இதுவரை 13 மாகாணங்களில் 213 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் 29,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் நோவா ஸ்கோடியா, பாரிங்டன் நதிக்கரை, ஆல்பர்ட்டா பகுதிகளில் காட்டுத் தீயால் 67 லட்சம் ஏக்கர்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கனடாவின் கூபெக் நகரில் காட்டுத் தீயால் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டு 10,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
English Summary
Wildfire ravages Canada destroys 67 lakh hectares forest