சிலியில் பயங்கர காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு - Seithipunal
Seithipunal


சிலியில் பரவி வரும் காட்டுத்தியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் வெப்ப காற்று வீசி வருகின்றன. இதனால் வனப்பகுதிகள், விவசாய நிலங்கள், கிராமங்கள் என 150க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. 

இந்நிலையில் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை 34,500 ஏக்கர் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாகவும், அதில் 65 இடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலியின் குயிலோன் கிராமப் பகுதிகளில் இருந்த குடிசைகள் நாசமாகி உள்ளன. பயோபியோவின், சாண்டா ஜுவானா நகரில் விவசாய நிலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நாடு முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகின. தற்பொழுது காட்டுத்தீயில் சிக்கி பலியானவர் எண்ணிக்கை 22 அதிகரித்துள்ளது.

இதில் பயோபியோவின் பகுதியில் 16 பேர், லா அருணாசியாவில் 5 பேர், நுபில் பகுதியில் ஒருவர் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்ஜென்டினா விமானங்களின் உதவியுடன் தீயணைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wildfires torch forests in Chile death toll at 22


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->