ரஷ்யா உக்ரைன் போர்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் அரை நிர்வாணத்தில் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


கேன்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரைன் கொடியுடன் வண்ணம் தீட்டி மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்த போது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உக்ரைன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடினார்.

மேலும் எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையை கழற்றி வீசிவிட்டு அரை நிர்வாணமாக நின்றார். மேலும் அந்த பெண் போராட்டக்காரர் உக்ரைனின் கொடியை தனது உடலில் வரைந்திருந்தார். 

அதில் எங்களை கற்பழிப்பதை நிறுத்து என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women half nude protest in Cannes Film festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->