போரினால் உக்ரைனில் வறுமை 10 மடங்கு அதிகரிப்பு - உலக வங்கி
World bank says poverty increased to ten fold in Ukraine due to war
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரினால் உக்ரைனில் ஏராளமான உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், போரினால் உக்ரைனில் வறுமையின் அளவு 10 மடங்காக அதிகரித்துள்ளது என்றும், இந்த வருடம் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது என்றும், உலக வங்கியின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் அருப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் குளிர்காலம் தொடங்கப்பட உள்ள நிலையில் வீடுகள், கட்டிடங்கள் புறனமைக்கும் பணி பொருளாதார சிக்கலினால் தடைபட்டுள்ளது எனவும், இதனால் மற்ற நாடுகளுக்கு இடம்பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நன்கொடையாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு 55 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார். அதில் 38 பில்லியன் டாலர்கள் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்கவும், 17 பில்லியன் டாலர்கள் பள்ளிகள், வீடுகள் மற்றும் எரிசக்தி மையங்களை சீரமைக்கும் பணிக்காக தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
World bank says poverty increased to ten fold in Ukraine due to war