வரலாறு : மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்... இன்று உலக மக்கள் தொகை தினம்..!! - Seithipunal
Seithipunal


உலக மக்கள் தொகை தினம் :

உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.

பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கா.மீனாட்சிசுந்தரம் :

தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றிய கா.மீனாட்சிசுந்தரம் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு என்னும் ஊரில் பிறந்தார். 

இவர் எழுதிய சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 

மேலும், இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகளில் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர் தனது 90வது வயதில் (2015) மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Population Day 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->