இஸ்ரேல் - பாலஸ்தீனிய மோதல் : பாலஸ்தீனிய இளைஞர் சுட்டுக்கொலை.!
youth died isrel palastiniya fight in west bank
பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த மோதலில், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி இஸ்ரேல் ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறது.
அந்தவகையில், மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் அடிக்கடி இருதரப்பினரும் மோதிகொள்கின்றனர். அதில், இந்த ஆண்டு மட்டுமே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலில் சுமார் 150 பாலஸ்தீனியர்களும், 31 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்தவ பைபிளில் இடம் பெற்றிருக்கிற யோசேப்பின் கல்லறை, மேற்குக் கரையின் எல்லையிலுள்ள நப்லஸ் நகரில் அமைந்து உள்ளது. இந்தக் கல்லறைக்கு யூதர்களை அழைத்துச் செல்வதற்காக இஸ்ரேல் படை வீரர்கள் நேற்று அதிகாலை நப்லஸ் நகருக்குள் நுழைந்தனர்.
அப்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் அகமத் டராக்மே என்ற பாலஸ்தீனிய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
English Summary
youth died isrel palastiniya fight in west bank