ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை - ஜெலன்ஸ்கி திட்டவட்டம் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவிகளை செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ரஷிய அதிபர் புதின், உக்ரைனை அழிப்பது ரஷ்யாவின் நோக்கமல்ல என்றும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என உக்ரைன் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த அக்டோபர் 10-ந்தேதி முதல் ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் உக்ரைனில் உள்ள 30 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

இதனால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இனி ரஷிய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky say no more room for negotiations with Russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->