உக்ரைன் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைத்தது பயனற்றது - அதிபர் ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 மாகாணங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

இதையடுத்து இந்த நான்கு மாகாணங்களை ரஷ்யவுடன் இணைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் கைப்பற்றிய 4 மாகாணங்களையும் அதிகாரபூர்வமாக ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். மேலும் உக்ரைன் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் சட்டத்தில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். 

இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்கள் நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எந்தவொரு ரஷ்யா முடிவும், எந்த ஒரு ஒப்பந்தங்களும் பயனற்றவை. பயங்கரவாத நாட்டின் மதிப்பற்ற முடிவுகள் கையெழுத்திடப்பட்ட காகிதத்துக்கு மதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky says Annexation of Ukraine provinces with Russia is useless


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->