தண்ணீர், பாப் கார்ன், உப்புக்கு ஜி.எஸ்.டி! 55-வது ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரை! - Seithipunal
Seithipunal


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில்,

* பாப் கார்ன், உப்பு, மசாலா சேர்த்து எந்தவித எழுத்தும் இல்லாமல் கவரில் வழங்கப்பட்டால் (not pre-packaged) 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

பாக்கெட்டில் போட்டு பெயர் பொறிக்கப்பட்டால் (Labelled) 12% வரி விதிக்கப்படுகிறது. காராமெல் பாப் கார்னுக்கு 18% ஜி.எஸ்.டி. பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* 1000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கு வரி அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. தற்போதைய 5% வரி, 12% ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* 20 லிட்டர் தண்ணீர் கேனுக்கு 12% வரி விதிக்கப்படுகிறது. இதை 5% ஆக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சைக்கிள்களுக்கு உள்ள 12% வரி, 5% ஆக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* ஆர்டர் செய்து வாங்கப்படும் உணவுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் மீதான வரியை குறைப்பதற்கான ஆலோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

* 15 ஆயிரம் ரூபாய்க்கு மேலான விலை கொண்ட ஷூக்களுக்கான வரியை 15% இருந்து 28% ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55th GST Council


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->