சேலம் ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா..ஆடு, கிடா, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!
Salem Sri Vadabhadrakaliamman Temple Festival People sacrificed goats goats and chickens and offered Pongal
சேலம் ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் கோவில் 43-ம் ஆண்டு திருவிழாவில் பொங்கல் வைத்தல் ஆடு கிடா கோழி வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ,
சேலம் மாவட்டம் பிள்ளையார் நகரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் கோவில் 43-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது .
சித்திரை 10 ஆம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சக்தி கரகம் பூங்கரகம் அக்னி கரகம் பால்குட ஊர்வலம் பொங்கல் வைத்தல் ஆடு கிடா கோழி வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ,
அதனைத் தொடர்ந்து கருணாகரன் தலைமை சரோஜாகருணாகரன் செளரிணிஅருண் கிருத்விக்கர்ணா குடும்பத்தார் அம்மனுக்கு சீர்வரிசை படைத்தல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .மதியம் பாரதிஅருட்குமரன் சுரேந்தர்கர்ணர பிரியதர்ஷினிசுரேந்தர் தலைமையில் சமபந்தி விருந்து நடைப்பெற்றது .இரவு 8மணிக்கு மேல் பூங்கரகம் அக்னி கரகம்,மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது .இவ்விழாவில் நிர்வாக குழு தலைவர் க.வணங்காமுடி செயலாளர் வேலு, பொருளாளர் செல்வகுமார், துணை பொருளாளர் ஆனந்தகுமார், துணைத்தலைவர்கள் நந்தகுமார், ரவிச்சந்திரன், ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் ஆனந்தகுமார், சேகர், குண்டுமணி, சட்ட ஆலோசகர் தமிழரசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குண்டத்து பணியாளர்கள், விழா குழு இளைஞர்கள்,விழா குழுவினர் (மகளிர்) மற்றும் கோயில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
English Summary
Salem Sri Vadabhadrakaliamman Temple Festival People sacrificed goats goats and chickens and offered Pongal