பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்: சென்னை-ஐதராபாத் இன்று மோதல்!
IPL Chennail Super Kings VS Sunrisers Hyderabad Clash Today
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் பேட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2-இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. இதனால் தரவரிசையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9ம் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னை அணிக்கு இனிமேல் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே 2010-ம் ஆண்டு போல் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
English Summary
IPL Chennail Super Kings VS Sunrisers Hyderabad Clash Today