ஏப்ரல் 1 முதல் விலை உயர்வு! பாதிக்கப்படப்போகும் ஏழை மக்கள்!
800 medicine rate high in april
மக்களின் அதிக பயன்பாட்டில் உள்ள பாரஸ்ட்டம்மல் உள்ளிட்ட 800 அவசியமான மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின்படி, 800 மருந்துகளின் விலை வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் 10.7 சதவீதம் உயர உள்ளதாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
2020 -2021 ஆம் ஆண்டுகளைப் போன்று, இந்த நிதியாண்டிலும் 10.7 சதவீதம் 800 மருந்துகளின் விலை உயர உள்ளது.
முக்கியமாக காய்ச்சல், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தொழு நோய்கள், ரத்தசோகை உள்ளிட்ட சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்கிறது.
இந்த மருந்து விலை உயர்வு காரணமாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
English Summary
800 medicine rate high in april