தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்; தீ பற்றியதில் அலறி ஓடிய நிர்வாகிகள்..!
DMK members protest by burning the effigy of Dharmendra Pradhan Executives ran away screaming as the fire broke out
மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, இன்று திமுகவினர் தேனி மற்றும் போடியில் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் போது கட்சி நிர்வாகிகள் இருவர் மீதும் தீப்பற்றியுள்ளது. லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தி.மு.க.. எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று தேனி நேரு சிலை அருகே அவரின் உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் தலைமை வகித்ததோடு, நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் முன்னிலை வகித்தார்.கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். குறித்த போராட்டத்தில் உருவ பொம்மை எரித்தபோது தேனி நகர நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாகண்ணன் மீது திடீரென தீ பற்றியுள்ளது. அதை அங்குள்ளவர்கள் அணைத்துள்ளனர். இதானால் இவரது கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், போடி தேவர் சிலை அருகே நடந்த உருவ பொம்மை எரிப்பு ஆரப்பாட்டத்தில் தி.மு.க., நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்ததோடு, துணைச் செயலாளர் பரணி முன்னிலை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள் மத்திய அமைச்சரின் உருவபொம்மையை எரித்தனர். இதன் போது நகர முதல் வார்டு தி.மு.க. செயலாளர் சந்திரசேகரின் வேட்டியில் தீ பற்றியுள்ளது. இதனால் அவர் உடனடியாக வேட்டியை கழற்றி வீசிவிட்டு, உடலில் தீ படாதவாறு ஓட்டம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK members protest by burning the effigy of Dharmendra Pradhan Executives ran away screaming as the fire broke out