போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையத்தை முற்றுகையிட்ட கேரளா போலீசார்; அசாமை சேர்ந்தவர் கைது..!
Kerala police raid fake Aadhaar card production centre Assam resident arrested
கேரளாவில் போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையத்தை போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். கேரள போலீசாருக்கு பெரும்பாவூரில் உள்ள ஒரு கடையில் போலியான ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் பெரும்பாவூரின் தனியர் பேருந்து நிலையம் அருகே, ஒரு ஷாப்பிங் வளாகத்தின் தரை தளத்தில் உள்ள மொபைல் போன் கடைக்குள் இந்த பிரிவு செயல் பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
அதன்படி, குறித்த மொபைல் கடையை முற்றுகையிட்ட போலீசார் அங்கு சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு பல போலி ஆதார் அட்டைகள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள், மொபைல் போன்கள் மற்றும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு போலி நிறுவனத்தை நடத்தி வந்த அசாமை சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kerala police raid fake Aadhaar card production centre Assam resident arrested