#BigBreaking | இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! 8 நாள் விடுமுறை - வெளியாகிறது அறிவிப்பு!
Bank Holiday new order
கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.
தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்புப்படி பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு , கிராமப்புற, உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் பொது விடுமுறை விடப்படுகிறது.
மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், வங்கிகள் முழு வேலை நாளாக செயல்பட்டுவந்த நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று, வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், வாரத்தின் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் 30 நிமிடங்கள் கூடுதலாக வாங்கி ஊழியர்கள் பணி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் புகைப்படத்தை காணவும்: