அதிரடியாக குறைந்த சிக்கன் விலை - எவ்வளவு தெரியுமா?
chicken price decrease
வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் அந்த வகையில், வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் உயிருடன் கறிக்கோழி கிலோ 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 8 ரூபாய் குறைந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், மாநிலம் முழுவதும் சிக்கன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

இந்தக் கோழி பண்ணைகளில் இருந்து 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் முட்டை கொள்முதல் விலை 415 காசு உயர்ந்துள்ளது.
பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.10 ஆக இருந்த நிலையில், தற்பொழுது ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை 4.70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு முட்டைக்கோழியின் விலை கிலோ ரூ.70 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.