தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜானுக்கு விடுமுறை இல்லையா? - தமிழக அரசு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை அன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில். இந்த தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதாவது:- "இது முற்றிலும் பொய்யான தகவல். மாசிமக திருவிழாவை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு பதிலாக வருகிற 29-ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 29-ந்தேதியன்று ரம்ஜான் பண்டிகை இல்லை. வருகிற 31-ந்தேதியன்று திங்கட்கிழமை தான் ரம்ஜான் விடுமுறை என்று தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிறை பார்க்கப்பட்டு தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பின் அடிப்படையில் ரம்ஜான் தேதியில் மாற்றங்கள் இருக்கலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn government explain no holiday to ramjan festival in tanjavur district issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->