டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம்? கருது கேட்கும் ரிசர்வ் பேங்க்.!
Fees for digital money transactions The Reserve Bank consideration
பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடைமுறைகளைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் உரிய கருத்துகளை வருகின்ற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதிக்குள், மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சிறிய நடைப்பாதைக் கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்திய யூனியன் வங்கி முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வந்துவிட்டது.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மக்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ம பணப்பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் உள்ளது. மேலும், பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, குறைபாடுகளைப் போக்குவது மற்றும் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்டவைகளிலிலும் இந்திய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது.
English Summary
Fees for digital money transactions The Reserve Bank consideration