வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பிறகு சரிந்த அந்நியச் செலாவணி !! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட பிறகு சமீப காலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.92 பில்லியன் டாலர் குறைந்து 652.89 பில்லியன் டாலராக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இது 655.81 பில்லியன் டாலராக இருந்தது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த  ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் $2.097 பில்லியன் குறைந்து $574.24 பில்லியனாக உள்ளது. SDR $54 மில்லியன் குறைந்து $18.107 பில்லியனாக உள்ளது. 

மேலும் ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பும் குறைந்து 1.015 பில்லியன் டாலர்கள் குறைந்து 55.96 பில்லியன் டாலரை தொட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் டெபாசிட் செய்யப்பட்ட கையிருப்பு அதிகரித்து, 245 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 4.581 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது.

நாணயச் சந்தையில் டாலருக்கு எதிராக ரூபாய் வலுவடைந்தது. ஒரு டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 12 பைசா சரிந்து 83.54 ஆக இருந்தது. இருப்பினும் முந்தைய அமர்வில் ரூ.83.66 என்ற அளவில் முடிவடைந்தது. உலக அளவில் இந்தியா 652.89 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forex collapses after hitting all time high


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->