ரசாயன பொடியைத் தூவி காரில் கொல்லையா? - தமிழக அரசு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா கோவில் கேட் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் மர்ம நபர் சிலர் ஒருவித ரசாயன பொடியை தூவிய உடன் கார் கண்ணாடி சத்தம் இல்லாமல் உடைகிறது. இதையடுத்து அந்த நபர் காரின் உள்ளே இருந்த பையை திருடி செல்கிறார். 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

'இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. மஹாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உண்டிக்கோல் வைத்து உடைத்து திருடிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவை தமிழ்நாடு என்று பரப்பி வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government explain robbery in car issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->