புதிய அரசாங்கத்திற்கு பிறகு, குறைந்த தங்கம் விலை !! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு நாடு முழுவதும் தங்கம் விலை சரிந்துள்ளது. இருந்தாலும், வெள்ளி விலை கொஞ்சம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று தங்கம் விலை 10 கிராமுக்கு 71 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.89,500க்கு கீழ் குறைந்துள்ளது. எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.70,912 கீழ் குறைந்துள்ளது. இதற்க்கு முன் இந்த தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.71,150. அதில் ரூ.426 குறைந்து காணப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை ரூ.326 அதிகரித்து உள்ளது.

புதிய அரசாங்கம் அமைந்த உடன் நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.71,820. அதே போல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.71760 ஆக இருக்கிறது. தமிழகத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.72,330. மற்றொரு பெரு நகரமான கொல்கத்தாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.71,670 ஆக உள்ளது

தற்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை $11.80 குறைந்து காணப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கதின் விலை $2313.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியின் விலை, $0.225 அதிகரித்துள்ளது. இன்று  வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 29.665 டாலராக குறைந்துள்ளது.

தற்போது மே மாதத்தில் உலகிலேயே மூன்றாவது பெரிய தங்கம் வாங்கும் நாடு இந்தியா. இந்த சூழ்நிலையில் இந்தியா ரூ.722 கோடிக்கு தங்கத்தை வாங்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold price has been reduced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->