ஹோண்டா 'டியோ' ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்கூட்டர் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

இந்திய சந்தையில் புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை -ரூ. 68,317 என்றும் டீலக்ஸ் வேரியண்ட் விலை -ரூ. 73,317 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

• டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டிராண்டியம் சில்வர் மெட்டாலிக் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

• 110சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.6 ஹெச்.பி. பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்டது. 

•ஸ்போர்ட்ஸ் டிசைன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

•முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் வழங்கப்பட்டுள்ளது.

• பிரேக்கிங்கிற்கு 130 மில்லிமீட்டர் அளவில் இரண்டு புறமும் டிரம் பிரேக்குள் வழங்கப்பட்டுள்ளது.

• ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் தற்போது ஹோண்டா நிறுவனத்தின் ரெட் விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HONDA DIO SPORTS BIKE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->