#BREAKING :: மதுரை மல்லிகை விலை கிடு கிடு உயர்வு..!!
Jasmine flower price increase in madurai markets
தமிழகத்தின் தற்பொழுது குளிர்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூவின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால் சந்தைகளுக்கான வரத்து மிகவும் கணிசமாக குறைந்துள்ளது. அதேபோன்று பொங்கல் சீசன் ஆரம்பமாகியுள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று முல்லைப் பூ கிலோ 1300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1200 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் நெருங்குவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Jasmine flower price increase in madurai markets