விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது...செல்வப்பெருந்தகை பேட்டி!
Vijay cant make any impact Rich Interview
பரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களையும், போராட்ட குழுவினரையும் சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் இன்று வருகைதந்தார்.அப்போது பேசிய விஜய் :நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்றும் விமான நிலையம் வரக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த இடத்தில் வரக்கூடாதுஎன கூறுகிறேன் என தெரிவித்த விஜய் விமான நிலைய திட்டத்தை நான் எதிர்க்கவில்லை என்றும் பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என குறிப்பிட்டு பேசினார் .
மேலும் பேசிய விஜய் வளர்ச்சி முக்கியம்தான், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீர்கள் என்றும் விமான நிலைய திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் ஆனால், விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்துங்கள்' என்றார்

இந்நிலையில் பரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்றும் நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay cant make any impact Rich Interview