வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா கார் நிறுவனம்.!
Kia car company
கியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி சொனெட் மாடலின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி உள்ளது. புதிய சொனெட் மாடலின் விலை தற்போது ரூ. 34,000 வரை அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் ஆனிவர்சரி எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவற்றில் பேஸ் வேரியண்டான HTE மாடலின் விலை ரூ. 34,000 உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 10,000 துவங்கி அதிகபட்சம் ரூ. 16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கியா நிறுவனம் சொனெட் 2022 வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இந்த புது மாடலில் அதிக ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், டையர் பிரெஷர் மாணிட்டிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் இபிஎஸ் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.