கியா புதிய சொனெட் X லைன் மாடல் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


கியா இந்தியா நிறுவனம் அதன் புதிய சொனெட் X லைன் மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. கியா நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு விழாவின் போது கியா சொனெட் X லைன் மாடலில் விலை விவரங்கள்  அறிவிக்கப்படலாம். 

இந்த காரின் பின்புறமாக X லைன் பேட்ஜிங் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரிய அலாய் வீல்கள், ஆரஞ்சு அக்செண்ட்கள் மற்றும் பிளாக்டு அவுட் எலிமெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. கியா சொனெட் X லைன் மாடல் எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்த மாடல் செல்டோஸ் X லைன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

காரின் உள்புறம் சொனெட் X லைன் மாடலில் புளூ நிற ஷேட் செய்யப்பட்டு உள்ளது. புதிய X லைன் வேரியண்ட் சொனெட் டாப் எண்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது,

எனவே இதில் அதிகளவில் அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சொனெட் X லைன் மாடலிலும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kia New Sonet X Line Model Launched


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->