வக்பு மசோதாவுக்கு எதிராக 18 இடங்களில் போராட்டம் நடத்திய தவெகவினர்; சென்னையில் 03 பிரிவுகளின் கீழ் 2000 பேர் மீது வழக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வக்பு சட்டத்திருத்த மசோதா, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என தவெக தலைவர் விஜய் விமர்சித்து இருந்தார்.

குறித்த வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் தவெகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இதனை தவெக மாவட்ட செயலாளர்கள் சார்பில் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. 

இதில் ஏராளமான தவெகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, சென்னை பனையூரில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தடையை மீறி சென்னையில் தவெகவினர் போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது 03 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 18 இடங்களில் போராட்டம் நடத்திய சுமார் 2,000 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2000 people have been booked under 03 sections in Chennai for protesting against the Waqf Bill


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->