மாருதி சுஸுகி 10வது தலைமுறை ஆல்டோ – 100 கிலோ எடை குறைப்பு, புதிய அம்சங்கள்! குறைந்த Alto காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!
Maruti Suzuki 10th Generation Alto 100 kg weight reduction new features Suzuki introduces the lightest Alto
மாருதி சுஸுகி நிறுவனம் தனது சிறிய கார் பிரிவில் புதிய புரட்சிக்கு தயாராகி வருகிறது. இந்தியர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ள ஆல்டோ ஹட்ச்பேக், தனது 10வது தலைமுறை மாடலுடன் அடுத்த ஆண்டு (2026) சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்த முறை, ஆல்டோவில் காணப்படும் மிகப்பெரிய மாற்றம் – எடை குறைப்பு தான்.
100 கிலோ எடை இழப்பு!
தற்போதைய 9வது தலைமுறை ஆல்டோவின் எடை 680 கிலோ முதல் 760 கிலோ வரை உள்ளது. ஆனால் புதிய ஆல்டோவின் எடை 580 கிலோ முதல் 660 கிலோ வரையிலானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஸுகி, தனது Heartect பிளாட்பாரம் மற்றும் அதிக வலிமை கொண்ட எஃகு (UHSS & AHSS) மூலம் இந்த எடை இழப்பை சாதிக்க முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பும், வலிமையும் சமநிலையில்!
பாதுகாப்பை பாதிக்காமல் எடையை குறைப்பது சவாலானது. ஆனால் Heartect இயங்குதளத்தில் மேம்பட்ட கட்டமைப்பு, Dual Airbags, ABS+EBD, ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும்.
புதிய தொழில்நுட்பங்கள் & இண்டீரியர் மாற்றங்கள்
புதிய ஆல்டோவின் உள்ளமைப்பிலும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது:
முன்னேற்றமான மைலேஜ், ஹைப்ரிட் சிஸ்டம் வாய்ப்பு
இலகுரக உடலமைப்பின் காரணமாக, புதிய ஆல்டோவின் மைலேஜ் 27.7 முதல் 30 கிமீ/லிட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 48V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் கூட சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது ஆனாலும், விலையில் சற்று கூடுதல் இருக்கும்.
விலை & வெளியீடு
புதிய ஆல்டோ முதலில் ஜப்பானில் அறிமுகமாகும். அங்கு பெட்ரோல் மாடல் விலை 10.68 லட்சம் யென் (₹5.83 லட்சம்), ஹைப்ரிட் மாடல் விலை 12.18 லட்சம் யென் (₹6.65 லட்சம்) ஆகும்.
இந்தியாவில் புதிய ஆல்டோவின் ஆரம்ப விலை ₹5.4 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகம் 2026ஆம் ஆண்டில் நடைபெறலாம்.
இந்தியாவின் சிறிய கார் சந்தையில் மீண்டும் ஒரு கிளாசிக் ஹீரோவாக ஆல்டோ மீண்டும் உச்சி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Maruti Suzuki 10th Generation Alto 100 kg weight reduction new features Suzuki introduces the lightest Alto