உடலுறவு மாத்திரை எடுத்து ஷேன் வார்ன் மரணமடைந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்; இதற்குப் பின்னால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உள்ளதா..? - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக சுழற்பந்து ஜாம்பவன் ஷேன் வார்ன்  கடந்த 2022-ஆம் ஆண்டு தாய்லாந்து சுற்றுலா சென்றபோது மாரடைப்பால் காலமானார். அவரது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது மரணம் குறித்து தற்போது வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேன் வார்ன் இறந்து கிடந்த வில்லாவில் இருந்து உடலுறவுக்கான போதை மாத்திரை பாட்டில் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை போலீசார் மறைத்ததாகவும் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், அவரது இறப்புக்கு அந்த மாத்திரை தான் காரணமா? என்ற கேள்வி எழுந்தது. இவருடைய இறப்பு குறித்து, விசாரணை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக வழக்கு விசாரணையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;

ஷேன் வார்னே உயிரிழந்தபோது அவரது உடல் அருகே ஒரு போதைப்பொருள் இருந்தது. அது உடலுறவு மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் போதைப்பொருள் என்று குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த மாத்திரையை இதயம் பலவீனமாக உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது என கூறிய அவர், ஷேன் வார்ன்  உடலுக்கு அருகில் வாந்தி எடுத்ததற்கான அடையாளமும், ரத்தமும் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஷேன் வார்னேவின் மரணத்திற்குப் பின்னால் இந்த போதைப்பொருள் கூட இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவருடைய மேலதிகாரி அந்தப் போதைப்பொருளை எடுக்குமாறு கூறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில், ''கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட தங்களது வீரருக்கு இப்படி ஒரு மரணம் நிகழ்ந்ததாக வெளியாகும் செய்தி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களும் இதற்குப் பின்னால் இருக்கலாம்." என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளமை தற்போது பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shane Warne died after taking sex drug pills Shocking information released


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->