ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் அடுத்த வெர்ஷன் ஓலா S1 மாடலின் முன்பதிவு.! - Seithipunal
Seithipunal


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்தாண்டு ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் ஆரம்ப விலை ரூ. 99 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. 

இதன் விற்பனை செப்டம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஓலா S1 மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ. 499 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் அறிமுக விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், முன்னணி வங்கிகளுடன் சேர்ந்து மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இதற்கான மாத தவணை ரூ. 2 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இத்துடன் கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• ஓலா S1 ஸ்கூட்டர் ஜெட் பிளாக், பொர்சிலெயின் வைட், நியோ மிண்ட் மற்றும் லிக்விட் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 

• இந்த ஓலா S1 ஸ்கூட்டர் மாடலில் 2.98 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

• ஓலா S1 ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

• ஹைப்பர் மோட் தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் ஓலா S1 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ola s1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->