ஒரகடம்: ரூ.2,858 கோடியில் அமையவுள்ள உலகளாவிய உற்பத்தி மையம் - வெளியான முக்கிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இவ்வருடங்களில், தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் மற்றும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்த்து, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் 127 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,858 கோடியில் அமையவுள்ள உலகளாவிய உற்பத்தி மையத்துக்கான அடிக்கல் அங்கீகாரம் கடந்த ஆகஸ்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்டது.

இந்த புதிய உற்பத்தி மையத்தால் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்காக செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த மையத்தில் கண்ணாடி கம்பளி, ஜிப்சம் பிளாஸ்டர்போர்டு, பிளாஸ்டர்கள், ஃப்ளோட் கிளாஸ், சோலார் கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Orakadam Global Manufacturing Center update


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->