ஒரு வருடமாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!
Petrol and diesel price not change in 365 days
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது.
இதில், விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, சிறிதளவில் இறக்கம், ஏற்றம் கண்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகரித்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.
இதில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று 365-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனையாகி வருகிறது.
English Summary
Petrol and diesel price not change in 365 days