ஆண்டிப்பட்டியில் 'இட்லி கடை' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; தீயணைப்புத்துறையினர் தீவிரம்..!
Fire breaks out on the set of Idli Kadai
நடிகர் தனுஷ் இயக்கத்தில் 04-வது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. தனுஷே இயக்கி நடிக்கும் தனுஷே இந்த படத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படப்பிடிப்பு பணி நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 01-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது, 'இட்லி கடை' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்படி நடிகர் தனுஷின் இட்லி கடை படப்பிடிப்புக்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Fire breaks out on the set of Idli Kadai