பரபரப்பு.. ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு ஷவர்மா சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 

சம்பந்தப்பட்ட உணவகத்தை நேரில் ஆய்வு செய்து அதனை மூட உத்தரவிட்டனர். மேலும், மசாலா பூசப்பட்ட கோழி மற்றும் மயோனைஸின் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டன. ஷவர்மா மற்றும் மயோனைஸ் தயாரிப்பதில் ஏற்பட்ட தவறு மாசுபாட்டிற்கு வழிவகுத்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் கரமனாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மற்றவர்கள் மணக்காடு மற்றும் அனயாராவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 

அதிகளவிலான நோயாளிகள் கிளிப்பாலம், கரமன, அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராஹம் மற்றும் பேட்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரைக்கும் எந்தவிதமான உயிர் சேதமும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30 peoples admitted hospital for eat shavarma


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->