களைகட்டிய ஈஸ்டர் பெருநாள் கொண்டாட்டம்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை! - Seithipunal
Seithipunal


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் பெருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். இதேபோல சென்னை ,பூண்டி ,புதுச்சேரி ,கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது,

இயேசு கிறிஸ்து, புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, மூன்றாம் நாள் ஈஸ்டர் பெருநாள் பண்டிகை உருவானது.

இயேசுவின் சிலுவைப்பாடுகளை உணரும் விதமாக 40 நாட்கள் தவக்கால வாழ்க்கை மேற்கொண்ட கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவாலயங்களில் நடைபெற்ற இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தத்ரூபமான காட்சிகள் கலையரங்கில் அரங்கேற்றம் செய்யப்பட்டன; இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈஸ்டர் பெருவிழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் பெருவிழாவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். இதேபோல சென்னை ,பூண்டி ,புதுச்சேரி ,கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது,ஆண்கள் ,பெண்கள்,சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிராத்தனையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.பின்னர் ஒருவக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Celebration of Easter Special prayers in churches


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->