மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்ட பிலிப் பீனல்பிறந்ததினம்!
Birthday of Philip Penal who laid the foundation for psychiatric research
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை' திரு.பிலிப் பீனல் அவர்கள் பிறந்ததினம்!.
'நவீன மனநல மருத்துவத்தின் தந்தை' என போற்றப்படும் பிலிப் பீனல் (Philippe Pinel) 1745ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.
சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத இவர் 15 ஆண்டுகாலம் எழுத்தாளராக இருந்தார்.
பின்பு மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் மறைந்ததில் பாதிக்கப்பட்டு மனநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அது பற்றிய குறிப்புகளை தொகுத்து 'மெமோர் ஆன் மேட்னஸ்' (Memoir on Madness) என்ற கட்டுரையை 1794ஆம் ஆண்டு வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப்புத்தகமாக உள்ளது.

மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்ட பிலிப் பீனல் தனது 81வது வயதில் 1826 அக்டோபர் 25 ஆம் தேதி் அன்று மறைந்தார்.
English Summary
Birthday of Philip Penal who laid the foundation for psychiatric research