ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? RBI ஆளுநரின் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 1ம் தேதி உடன் நிதியாண்டு முடிவுற்றது அடுத்து வரும் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக இன்று டெல்லியில் ரிசர்வ் வங்கியில் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் நிதி ஆண்டில் ரெப்போ வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என அறிவித்துள்ளார்.

மேலும் நிலையான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பணவீக்கம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

இதை டிசம்பர் மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்த முந்தைய உச்சத்தில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் 5.1 ஆக குறைந்துள்ளது. இதனை முன்னோக்கிப் பார்க்கும்போது வலுவான வளர்ச்சி வாய்ப்புகளுக்கான கொள்கையை இது முன்னிறுத்துகிறது. பணவிக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் பணவிக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் 4 சதவீதம் என்ற இலக்கை அடைய முயற்சி மேற்கொள்கிறோம்.

இந்தியாவின் நிதி உரிமைக்கு மற்றும் வேகமான ஜிடிபி வளர்ச்சியின் காரணமாக உள்நாட்டு வளர்ச்சியை நோக்கி நிலையான முதலீடு மற்றும் மேம்பட்ட உலகியல் சூழல் ஆகியவற்றால் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

கடந்த 2023 - 24 ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏழு சதவீதத்திற்கு அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது" என ரிசர்வ் வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI unchanged rebo rate of interest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->