ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் எப்போது வெளியாகும்?! அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என, ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

"எலெக்ட்ரிக் வாகன பிரிவு தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து அதிக வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிகிறது. 

இந்த எலெக்ட்ரிக் வாகனத்திற்கான ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன. மேலும், இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை நகர பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சிறந்த அனுபவமாக இருக்கும். தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. 

இந்த எலக்ட்ரிக் வாகனம் முழுவதும் ராயல் என்பீல்டு மாடலை போன்றே இருக்கும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகமாகும் போது சிறப்பானதாக இருக்கும். மேலும் இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்கும்". என்று சித்தார்தா  லால் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Royal Enfield electric bike update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->