வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த விவகாரம் - அதிரடி உத்தரவிட்ட ஃபிஃபா.!
spain football federation luis rubialas suspend for kiss issue
வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த விவகாரம் - அதிரடி உத்தரவிட்ட ஃபிஃபா.!
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னியில் கடந்த 20 ஆம் தேதி அன்று ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கான பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ் வீராங்கனைகளுக்கு வரிசையாக வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், ஜென்னி ஹெர்மோசோ என்ற வீராங்கனையை திடீரென ஆரத்தழுவி உதட்டில் முத்தமிட்டார்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, விசாரணை செய்ததற்கு வீராங்கனையின் சம்மதத்துடனே முத்தமிட்டதாக லூயிஸ் தெரிவித்தார். ஆனால், இதனை ஜென்னி மறுத்தார்.
உடனே, லூயிஸ் பதவி விலகக்கோரி வீராங்கனைகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் ஆரம்பமாகின. இதைத் தொடர்ந்து, ஸ்பெயின் அரசு சார்பிலும் லூயிஸ்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இருப்பினும், லூயிஸ் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார். தற்போது, இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, லூயிஸ் ரூபியால்ஸ் மீது ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, "ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, 90 நாட்களுக்கு லூயிஸை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஃபிஃபா, இந்த இடைப்பட்ட காலத்தில் கால்பந்து வீராங்கனை ஜென்னியை லூயிஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் விசாரணை விவகாரம் தொடர்பாக அவருக்கு அழுத்தம் எதையும் தரக்கூடாது என்ற உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து லூயிஸ்க்கு எதிராக சர்வதேச அளவில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.
English Summary
spain football federation luis rubialas suspend for kiss issue