ஒரே நாளில் சரிந்த தக்காளி விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!
tomatto price decrease in tamilnadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து வரத்தும் குறைவாக வருகிறது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கடந்த வாரத்தோடு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து கொள்முதல் செய்யும் விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், பண்ணை பசுமைக் கடைகளில் 61 ரூபாயிக்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையில் திருவல்லிகேணி, ராயப்பேட்டை பகுதியில் நியாயவிலை கடைகள் மூலமாகவும் அம்மா உணவகங்களுக்கு பண்ணை பசுமை கடைகள் ஊழியர்கள் வாயிலாகவும் தக்காளி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தக்காளி விலை இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 வரை குறைந்துள்ளது. நேற்றுவரை தக்காளி விலை ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது விலை குறைந்துள்ளது.
English Summary
tomatto price decrease in tamilnadu