டொயோட்டா இன்னோவா விற்பனையில் அமோக வரவேற்பு.! - Seithipunal
Seithipunal



டொயோட்டா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் எம்பிவி மாடல் இன்னோவா விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இன்னோவா மாடல் கடந்த பல ஆண்டுகளாக விற்பனை சீராக இருந்த நிலையில் தற்போது எம்பிவி பிரிவில் அசைக்க முடியாத மாடலாக மாறியுள்ளது. 

இந்திய சந்தையில் இன்னோவா மாடல் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் வியாபாரத்தை துவங்கியதிலிருந்து முதன் முறையாக ஒரே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 13,105 யூனிட்களை விற்பனை செய்தது. இதனை அடுத்து கடந்த ஜூன் மாத விற்பனையில் டொயோட்டா 16 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 19 சதவீதமாகும். 

இதனை தொடர்ந்து, ஜூலை மாத விற்பனையில் 19 ஆயிரத்து 693 கார்களை விற்பனை செய்ததாக டொயோட்டா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த வகையில் கடந்த மாதம் மட்டும் டொயோட்டா நிறுவனம் வருடாந்திர விற்பனை 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Toyota Innova sales overwhelmingly welcome


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->