வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வு; காரணம் என்ன.. ?
What is the reason for the unprecedented rise in the price of gold
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தங்கம் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.74 ஆயிரத்து 320 ரூபாயாக விற்பனை ஆகிறது. இந்நிலையில், தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதில் முக்கியமாக புவிசார் அரசியல், நாடுகளுக்கு இடையேயான மோதல், பதற்றம் ஆகியவை அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பான முதலீடாக பல்வேறு நாடுகளும் தங்கத்தை அதிகம் வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயர்வடைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அத்துடன், அமெரிக்காவில் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற கவலை, மற்றும் அரசாங்க கடன் பிரச்சினை போன்றவையும் தங்க விலையை பாதிப்படைய வைக்கின்றன. இதில் நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கத்தை வாங்குக்கின்றனர். இத விளைவாகவும், தங்கம் விலை உயர்வடைவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்க அதிபராக 02 வது முறையை டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அதன் பிறகு அவர் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்துள்ளார். சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக போர் பதற்றம் காரணமாக பிற நாடுகளின் நாணயத்தை ஒப்பிடும் போது அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும், பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் நிலையற்ற தன்மை காணப்படுவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
What is the reason for the unprecedented rise in the price of gold