வெறும் 10,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம்!ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, எக்ஸ்ட்ரீம் 250R முன்பதிவு தொடக்கம் – முழு விவரம்!
You can book by paying just Rs 10000 Hero Xpulse 210 Xtreme 250R bookings open
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அதன் எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R பைக் மாடல்களின் முன்பதிவை தொடங்கியுள்ளது. ₹10,000 செலுத்தி இந்த பைக்குகளை முன்பதிவு செய்யலாம், மேலும் இந்த மாத இறுதிக்குள் டெலிவரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 – விலை, அம்சங்கள்
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 ஒரு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இது ₹1.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த மாடல் பேஸ் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- பிரீமியம் வேரியண்ட்டின் விலை – ₹1.86 லட்சம்
- எஞ்சின் – 210cc லிக்விட்-கூல்டு, 24.6 bhp பவர், 20.7 Nm டார்க்
- கியர்பாக்ஸ் – 6-ஸ்பீடு அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
- அம்சங்கள் – எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் கனெக்டிவிட்டி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்
- நிறங்கள் – அல்பைன் சில்வர், வைல்ட் ரெட், அஸூர் ப்ளூ, கிளேசியர் வைட்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R – விலை, அம்சங்கள்
எக்ஸ்ட்ரீம் 250R ஒரு நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் ஆகும், இது ₹1.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் வருகிறது.
- எஞ்சின் – 250cc லிக்விட்-கூல்டு, 29.58 bhp பவர், 25 Nm டார்க்
- அம்சங்கள் – டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் கனெக்டிவிட்டி, யூஎஸ்பி சார்ஜிங், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் (வேரியண்ட் அடிப்படையில்)
- நிறங்கள் – ஃபயர்ஸ்டார்ம் ரெட், ஸ்டெல்த் பிளாக், நியான் ஷூட்டிங் ஸ்டார்
போட்டி வாகனங்கள்
- எக்ஸ்பல்ஸ் 210 – கவாசாகி KLX 230 போன்ற மோட்டார்சைக்கிள்களுடன் போட்டியிடும்.
- எக்ஸ்ட்ரீம் 250R – பஜாஜ் டொமினார் 250, பஜாஜ் பல்சர் NS400Z, ஹோண்டா CB300F, சுசுகி ஜிக்ஸர் 250 போன்ற மாடல்களுக்கு நேரடியாக போட்டியாக அமைகிறது.
இந்த இரு பைக்குகளும் ஹீரோ பிரீமியம் ஸ்டோர்களில் முன்பதிவு செய்யக்கூடியவை. மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு மோட்டார்சைக்கிள்களாக, இந்திய பைக் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளன.
English Summary
You can book by paying just Rs 10000 Hero Xpulse 210 Xtreme 250R bookings open